மெட்ரோ நிறுவனத்தைக் கைப்பற்ற, ரிலையன்ஸ் மற்றும் சி.பி குழுமம் போட்டி

August 30, 2022

மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம், தனது இந்திய வர்த்தகத்தை முழுவதுமாக விற்பனை செய்ய உள்ளது. அதனைக் கைப்பற்ற, இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் தாய்லாந்தின் சி.பி குழுமம் ஆகியவை போட்டியிட்டு வருகின்றன. 2003 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த முதன்மையான அந்நிய நிறுவனங்களில், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம் முக்கியமானது. கடந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 6738.3 கோடி ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், நுகர்வோர் சந்தையில் நிலவும் அதிக போட்டி காரணமாக, மெட்ரோ கேஷ் […]

மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம், தனது இந்திய வர்த்தகத்தை முழுவதுமாக விற்பனை செய்ய உள்ளது. அதனைக் கைப்பற்ற, இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் தாய்லாந்தின் சி.பி குழுமம் ஆகியவை போட்டியிட்டு வருகின்றன.

2003 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த முதன்மையான அந்நிய நிறுவனங்களில், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம் முக்கியமானது. கடந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 6738.3 கோடி ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், நுகர்வோர் சந்தையில் நிலவும் அதிக போட்டி காரணமாக, மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனம், இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துள்ளதால், மெட்ரோ நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவை விட்டு வெளியேற உள்ள இந்த நிறுவனத்தின் வர்த்தகத்தை கைப்பற்ற, பல முக்கிய நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ நிர்வாகம் தனது வர்த்தகம், வளர்ச்சி வாய்ப்புகள், நிறுவனத்தின் செயல்திறன் அளவீடுகள் உள்ளிட்டவை குறித்து இந்தியாவின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் சி.பி குழுமம் ஆகியவற்றுக்கு விரிவான விளக்கவுரை அளித்தது. இதனால், இந்த இரு தொழில் நிறுவனங்களுள் ஒன்று, மெட்ரோ நிறுவனத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ நிறுவனத்தை கைப்பற்ற, ரிலையன்ஸ் குழுமம் 5600 கோடி ரூபாய் தர முன் வந்துள்ளதாகவும், சிபி குழுமம் 8000 கோடி ரூபாய் தர முன் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், நிறுவனத்தை இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்திடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு ரிலையன்ஸ் குழுமத்திற்கே கிடைக்கும் என்று பேசப்படுகிறது. இது தொடர்பாக, மூன்று நிறுவனத்தின் அதிகாரிகளிடமும் கேட்ட பொழுது, முடிவுகள் உறுதியாகவில்லை என்று தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu