டிரைவர் இல்லாத ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் சேவை 2026-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் இந்த ரெயில்களில் கண்காணிப்பு ஊழியர்களை வைத்திருக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:- 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 பெட்டிகள் கொண்ட 138 ரெயில்கள் வாங்கப்படுகிறது. இவை டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும். மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களுக்கு இந்த ரெயில்கள் வாங்கப்படும்.