இந்தியாவில் தமிழகம், கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் அமைக்க பணிகள் நடந்து வருகின்றது. இதை சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறிக்க மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் முறையாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம், ஓசூரில் இருந்து கர்நாடகாவின் பொம்மச்சந்திரா இடையே மெட்ரோ சேவைகள் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து டெண்டர் கேட்கப்பட்டது. இதற்கான சாத்திய கூறுகள் பற்றிய அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவைக்கான செலவை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும் என திட்டமிடப்பட்டுள்ளது.