கனமழைக்கு ஏற்ப மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
கனமழையின் காரணமாக, பயணிகளுக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவைகள் இயங்கும். பச்சை வழித்தடத்தில் காலை 8 மணி முதல் 11 மணி வரை 5 நிமிட இடைவெளியுடன், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியுடன் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் சேவை வழங்கப்படும். இதனால், பயணிகள் பாதுகாப்பாக மின் ரயில்கள் மூலம் பயணம் செய்யலாம்.