சென்னையில் மின்சார ரயில் சேவை இன்று நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரயில்கள் இன்று கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுகிறது. மேலும் இதனால் பயணிகள் சிரமமின்றி பயணிக்க மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. அதன்படி விம்கோ நகர் பணிமனை - விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - வண்ணாரப்பேட்டை மெட்ரோ காலை 8:00 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் நிலையம் வரை காலை 8:00 மணி முதல் ஆறு நிமிடங்கள் இடைவெளியிலும் இயக்கப்படுகின்றன. புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் நிலையம் முதல் விமான நிலையம் வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.