குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என காலை ஆறு மணி வரை ரயில்கள் இயங்கும். பின்னர் வழக்கமான அட்டவணையில் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.