வாட்ஸ் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்க நேரடியாக பயணச்சீட்டு பெறுவது, பயண அட்டை முறை, கியூ ஆர் கோடு என மூன்று முறைகள் உள்ளன. தற்போது வாட்ஸ் ஆப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணுக்கு ஹாய் என வாட்ஸ் ஆப் செய்தால் சாட் போர்டு திறக்கும்.
அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேர வேண்டிய இடம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து பின்னர் வாட்ஸ் ஆப்-ல், Gpay, paytm, மூலம் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். பயணிகளுக்கு பயணச்சீட்டு வாட்ஸ் ஆப்-ல் அனுப்பப்படும். அதனை ரயில் நிலையத்தில் முன்னுள்ள டிக்கெட் ஸ்கேனரில் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














