சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் உள்ள யூனியன் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதேபோல், அண்ணாநகரிலும் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை எனவும் மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.