மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் சேவை ரத்து

October 18, 2023

கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பார்லி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் இன்று 186 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது. அங்கு பயணத்தில் போது தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு பாறை மற்றும் மண் சரிந்தது. உடனடியாக ரயிலை நிறுத்தி ரயிலை பின்னோக்கி […]

கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பார்லி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் இன்று 186 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது. அங்கு பயணத்தில் போது தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு பாறை மற்றும் மண் சரிந்தது. உடனடியாக ரயிலை நிறுத்தி ரயிலை பின்னோக்கி இயக்கினார். சரிந்து விழுந்த மண்ணை அகற்றும் பணியில் ரயில்வே பணிமனை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu