மெக்சிகோ: சுவாமி விவேகானந்தர் சிலையை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்

September 3, 2022

இந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று சுவாமி விவேகானந்தர் சிலையை, மெக்சிகோவில் திறந்து வைத்தார். இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக மெக்சிகோ சென்றுள்ள சபாநாயகர் ஓம் பிர்லா, அங்கு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு திட்டங்களில் பங்கு பெற்றார். அதன் பகுதியாக, இன்று, சுவாமி விவேகானந்தர் சிலையை அவர் திறந்து வைத்தார். மேலும், லத்தீன் அமெரிக்கா பகுதியில் விவேகானந்தரின் சிலை அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று அவர் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியைப் பதிவிட்டுள்ளார். இதன் […]

இந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று சுவாமி விவேகானந்தர் சிலையை, மெக்சிகோவில் திறந்து வைத்தார்.

இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக மெக்சிகோ சென்றுள்ள சபாநாயகர் ஓம் பிர்லா, அங்கு இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு திட்டங்களில் பங்கு பெற்றார். அதன் பகுதியாக, இன்று, சுவாமி விவேகானந்தர் சிலையை அவர் திறந்து வைத்தார். மேலும், லத்தீன் அமெரிக்கா பகுதியில் விவேகானந்தரின் சிலை அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று அவர் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியைப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், சுவாமி விவேகானந்தரின் போதனைகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றும், இது அவருக்கான சரியான அஞ்சலி என்றும் பதிவிட்டுள்ளார். முன்னதாக, மெக்சிகோவின் பழமையான வேளாண் பல்கலைக்கழகமான சப்பினோ பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவர், அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர். பாண்டுரங்க கங்கோஜேவின் மார்பளவு உருவச் சிலையை திறந்து வைத்தார். மேலும், சாண்டியாகோவின் தலைமை பொறுப்பு அதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையில் உள்ள தொடர்பு மற்றும் நீண்ட கால நட்புறவு குறித்து பேசப்பட்டது. குறிப்பாக, இந்தியா விடுதலை அடைந்தபோது, அதனை அங்கீகரித்த முதல் நாடாக மெக்ஸிகோ இருந்தது என்றும், இந்தியாவை மேற்கத்தியர்கள் தேடும் முயற்சியில் மெக்சிகோ நாடு முதன் முதலில் கண்டறியப்பட்டது என்றும், குறிப்பிடப்பட்டது. மேலும், மெக்சிகோ நாடாளுமன்ற வளாகத்தில், இருநாட்டு நட்புறவைப் பறைசாற்றும் விதமாக ‘இந்தியா மெக்சிகோ நட்பு பூங்கா’வை அவர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தனது மெக்சிகோ வருகை மூலமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்துள்ளதாகக் கூறினார். அத்துடன், “இந்தியா மெக்சிகோ நட்பு பூங்காவில் மலரும் மலர்களைப் போல, இந்தியா மெக்சிகோ உறவும் நீண்ட நாட்களுக்கு மலர்ந்திருக்கும்” என்று அவர் ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu