மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நவாமி ஒசாகா முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி அடைந்தார்.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ஜப்பானின் நவாமி ஒசாகா, உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவா எதிராக விளையாடினார். முதல் செட்டில் 3-6 என்ற கணக்கில் ஒசாகா பின்னடைவு அடைந்தார்.அதனை மீறி அடுத்த இரண்டு செட்களில் 6-4, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.