பிங்க் தேடு பொறியில் சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பம் - மைக்ரோசாப்ட் அறிவிப்பு

February 8, 2023

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடுபொறியாக பிங்க் (Bing) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பிங்க் தேடுபொறியுடன், சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்டின் இந்த அறிவிப்பு, இணைய உலகில் புது பரிமாணமாகப் பார்க்கப்படுகிறது. பிங்க் தளம் மட்டுமல்லாது, எட்ஜ் பிரவுசரிலும் சாட்பாட் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் இணைக்க உள்ளது. நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மைக்ரோசாப்ட் இந்த தகவல்களை தெரிவித்தது. இந்த தொழில்நுட்பம் மூலம், தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் பிங்க் […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடுபொறியாக பிங்க் (Bing) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பிங்க் தேடுபொறியுடன், சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்டின் இந்த அறிவிப்பு, இணைய உலகில் புது பரிமாணமாகப் பார்க்கப்படுகிறது.

பிங்க் தளம் மட்டுமல்லாது, எட்ஜ் பிரவுசரிலும் சாட்பாட் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் இணைக்க உள்ளது. நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மைக்ரோசாப்ட் இந்த தகவல்களை தெரிவித்தது. இந்த தொழில்நுட்பம் மூலம், தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் பிங்க் தேடுபொறி, கூகுளின் முதல் இடத்தை ஆக்கிரமிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அத்துடன், பிங்க் தேடுபொறியின் நிரந்தர பயனர் எண்ணிக்கையிலும் கணிசமான உயர்வு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் அதிக தொகையை முதலீடு செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu