மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வெளியிடல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி நகரும் வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை தயாரித்து முன் வைத்துள்ளது. மேலும், பல்வேறு புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, விண்டோஸ் கோபைலட் இனிமேல் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம், இயங்குதளத்தில் செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, பிங்க் சாட், விண்டோஸ் கோபைலட் உடன் இணைக்கப்படுகிறது. அத்துடன், விண்டோஸ் 11 இயங்குதளத்தில் பல்வேறு மேம்படுத்தல்கள் புகுத்தப்படுகின்றன. குறிப்பாக, வேகமாக ஷட் டவுண் ஆவது, டாஸ்க் பாரில் இருந்து செயலிக்கு செல்வது, நேரம் மற்றும் தேதி குறித்த விவரங்களை டாஸ்க் பாரில் மறைத்துக் கொள்வது, தொகுப்பு பைல்களை முறைப்படுத்துவது போன்றவற்றுக்கான மேம்படுத்தல்கள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.