அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது, ஜோ பைடன் விலகியதால் கமலா ஹாரிஸ் டிரம்ப்பை எதிர்க்கும் வேட்பாளராக நிற்கிறார். அவருக்கு ஆதரவாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.420 கோடி நன்கொடை அளித்துள்ளார். பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டாவும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் கமலாவுக்கு நன்கொடை அளித்துள்ளனர். அதேபோல், தொழில்துறை மாமேதை எலான் மஸ்க் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையை குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக, கமலா ஹாரிஸுக்கு பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர், டொனால்ட் டிரம்பின் பொருளாதார கொள்கைகள், குடும்பக் கட்டுப்பாடு, உலகளாவிய சுகாதார திட்டங்கள் பற்றி கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.