நாடு முழுவதும் மைக்ரோசாஃப்ட் இணையதள கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிப்படைந்தது.
மைக்ரோசாப்ட் இணையதள பிரச்சனை காரணமாக நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை விமான நிலையத்திலும் இணையதளம் சேவை பாதிப்படைந்து இருந்தது. இதனால் மதுரை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ரத்து மற்றும் இரண்டு விமான சேவைகள் தாமதம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை மதுரையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்லக்கூடிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இணையதள பிரச்சனைகள் சீரானதை தொடர்ந்து இன்று காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அதேபோன்று பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.