எதிர்காலத்தில் வெளியாக உள்ள விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன்களில் வேர்ட்பேட் தளம் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வேர்ட்பேட் மென்பொருளுக்கு விடை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 28 ஆண்டுகளாக, விண்டோஸ் இயங்குதளத்தில் வேர்ட்பேட் மென்பொருள் இன்பில்ட் வகையில் கொடுக்கப்பட்டு வருகிறது. சரியாக, விண்டோஸ் 95 முதல் வேர்ட்பேட் அம்சம் இடம்பெற்று வருகிறது. இந்த மென்பொருள் சேவை, ‘டெப்ரிகேட் விண்டோஸ் அம்சம்’ என்ற பெயரில் தற்போது நீக்கப்பட இருக்கிறது. இதனை பயனர்களால் இன்ஸ்டால் செய்ய முடியாது என கூறப்படுகிறது. வேர்ட்பேட் தளத்துக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் விண்டோஸ் நோட்பேட் ஆகிய மென்பொருட்களை பயன்படுத்த பயனர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்த இறுதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முடிவுகளில் மாற்றங்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.