மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புதிய சுற்று பணி நீக்கம் அறிவிப்பு

July 5, 2024

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய சுற்றுப் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக பணிநீக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக பணி நீக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், பல்வேறு குழுக்களை உள்ளடக்கி பல்வேறு பணியிடங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இந்த வாரத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் இடம்பெறவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பணி நீக்கம் இருக்கும் […]

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய சுற்றுப் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக பணிநீக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக பணி நீக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், பல்வேறு குழுக்களை உள்ளடக்கி பல்வேறு பணியிடங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இந்த வாரத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் இடம்பெறவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பணி நீக்கம் இருக்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் பணிநீக்கத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், நிகழாண்டில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu