கேமிங் துறை வரலாற்றில் மைக்ரோசாப்ட் மிகப்பெரிய கையகப்படுத்தலை மேற்கொண்டு இருந்தது. Activision Blizzard நிறுவனத்தை 69 பில்லியன் டாலர்கள் தொகைக்கு வாங்கியது. தற்போது, இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்களால் தினப்படி அலுவல்களில் எந்தவித மாற்றங்களும் இருக்காது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவான எக்ஸ் பாக்ஸ், Activision Blizzard நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர், நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எக்ஸ்பாக்ஸ் தலைவர் பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் மாற்றங்கள் குறித்த விரிவான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.