கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம் அவுட்லுக் லைட் தளத்தை அறிமுகம் செய்தது. இது மின்னஞ்சல் சேவைகளை சிறிய அளவில் வழங்கும் தளமாகும். இந்த தளத்தில், தற்போது இந்திய பயனர்களுக்கான மேம்படுத்தலை மைக்ரோசாப்ட் கொண்டு வந்துள்ளது. அதன்படி, மைக்ரோசாப்ட் அவுட்லுக் லைட் தளத்தில் இந்திய மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், குறுஞ்செய்தி உடன் இந்த தளம் ஒன்றிணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலின் படி, இந்தி, குஜராத்தி, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மைக்ரோசாப்ட் அவுட்லுக் லைட் சேவைகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து, இந்தியாவின் இதர மொழிகளும் இந்த தளத்தில் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, இன்பாக்ஸ் தளத்தில், ரிமைண்டர்கள், அப்பாயிண்ட்மெண்ட்கள், கட்டணம் செலுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.














