சட்டவிரோதமாக, பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகளின் தகவல்களை சேகரித்ததாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 2015 முதல் 2020 வரை, பெற்றோர்கள் அனுமதி இன்றி, எக்ஸ் பாக்ஸ் கேமிங் தளத்திற்குள் வருகை தந்த குழந்தைகளின் தரவுகளை மைக்ரோசாப்ட் சேகரித்து உள்ளது. குழந்தைகளின் இணைய தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தை இது மீறுவதாக அமைந்துள்ளது. எனவே, அமெரிக்காவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ட்ரேட் கமிஷன் அமைப்புக்கு மைக்ரோசாப்ட் இந்த தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, எக்ஸ் பாக்ஸ் தளத்திற்கான தனி உரிமை கொள்கைகளை குழந்தைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டும் என்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெற்றோர் அனுமதி உடன் குழந்தைகள் கேமிங் தளத்திற்குள் செயல்படும் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.














