சாட் ஜிபிடி துணை கொண்டு இயங்கும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் பிரீமியம்

February 2, 2023

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி துணை கொண்டு இயங்கும் புதிய மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைக்கு மாதத்திற்கு 7 டாலர் வரை கட்டணம் பெறப்படுகிறது. இதுவே, வரும் ஜூலை மாதம் முதல் 10 டாலர்களாக உயர்த்தப்படும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. முன்னதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓபன் ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடுகள் செய்தது. கூகுளுக்கு போட்டியாக, தனது அனைத்து தயாரிப்புகளிலும் சாட் ஜிபிடி யை […]

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி துணை கொண்டு இயங்கும் புதிய மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைக்கு மாதத்திற்கு 7 டாலர் வரை கட்டணம் பெறப்படுகிறது. இதுவே, வரும் ஜூலை மாதம் முதல் 10 டாலர்களாக உயர்த்தப்படும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. முன்னதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓபன் ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடுகள் செய்தது. கூகுளுக்கு போட்டியாக, தனது அனைத்து தயாரிப்புகளிலும் சாட் ஜிபிடி யை இணைக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாட் ஜிபிடி துணை கொண்டு இயங்கும் டீம்ஸ் ப்ரீமியம் -ல் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சாட் ஜிபிடி, தானியங்கி முறையில் மீட்டிங் நோட்ஸ்களை உருவாக்கும் எனவும், பயனர் செய்ய வேண்டிய வேலைகளை பரிந்துரை செய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டீம்ஸ் பயனாளர்களுக்கு மீட்டிங் டெம்ப்ளேட் உருவாக்குவதற்கு துணை செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu