மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு ஜிட்ஹப் ஆகும். இந்த நிறுவனம் கோபைலட் என்ற சாட்பாட்டை வடிவமைத்திருந்தது. இதுவரையில் சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த சாட்பாட் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, இது பொது பயன்பாட்டுக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபைலட் சாட்பாட் பொது பயன்பாட்டுக்கு வெளியிடப்படுவதாக ஜிட்ஹப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 10 டாலர்கள் கட்டணத்திற்கு இந்த சாட்பாட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாட்பாட் சாட் ஜிபிடி போலவே செயல்படும் என கூறப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் சொந்த மொழியில் உரையாடி பதில்களை பெறலாம். தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கான சிறந்த ஆலோசனைகள் கோபைலட் மூலம் கிடைக்கும் என ஜிட்ஹப் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் துணைவேந்தர் ஷுயின் ஜாவோ, “உலக வரலாற்றில் பரவலாக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவியாக கோபைலட் வரலாறு படைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.