ஓபன் ஏஐ நிறுவனம், DALL-E என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், எழுத்து வடிவிலான அல்லது எழுத்துருக்களை புகைப்படங்களாக மாற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் இணைந்துள்ளதால், இனிமேல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங்க் தேடுபொறியில் DALL-E தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிங்க் இமேஜ் கிரியேட்டர்’, ‘பிங்க் சாட்’ தளத்துடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, DALL-E வசதி கணினிகள் மற்றும் கைப்பேசிகளில் மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு கிட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான போட்டியில், தொடர்ச்சியாக பல புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.