காசாவை மீண்டும் ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை - இஸ்ரேல் அதிபர்

November 10, 2023

காசாவை மீண்டும் ஆக்கிரமிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியதாவது, காசாவில் நாங்கள் அரசு அமைக்க முயற்சிக்கவில்லை. மீண்டும் ஆக்கிரமிக்க நினைக்கவில்லை. அங்கிருந்து யாரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. அங்கு பொதுமக்கள் அரசாங்கம் ஒன்று ஏற்பட வேண்டும். எங்களுக்கும் காசாவுக்கும் இடையே ஒரு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த நினைக்கிறோம். தற்போது இஸ்ரேல் ராணுவம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. போர் நிறுத்தம் என்பது சரணடைவதற்கு ஒப்பாகும். […]

காசாவை மீண்டும் ஆக்கிரமிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியதாவது, காசாவில் நாங்கள் அரசு அமைக்க முயற்சிக்கவில்லை. மீண்டும் ஆக்கிரமிக்க நினைக்கவில்லை. அங்கிருந்து யாரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கவில்லை. அங்கு பொதுமக்கள் அரசாங்கம் ஒன்று ஏற்பட வேண்டும். எங்களுக்கும் காசாவுக்கும் இடையே ஒரு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த நினைக்கிறோம். தற்போது இஸ்ரேல் ராணுவம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. போர் நிறுத்தம் என்பது சரணடைவதற்கு ஒப்பாகும். எனவே நாங்கள் போரிடவே விரும்புகிறோம். எங்களுடைய இந்த போருக்கு காலவரையறை இல்லை. எவ்வளவு நாட்கள் ஆனாலும் நாங்கள் ஹமாஸ் அமைப்பினை முற்றிலும் ஒழிக்க நினைக்கிறோம். காசாவுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை கொல்வதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராக உள்ளது. அப்போது தான் மேலும் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை போன்ற சம்பவம் ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக போருக்கு பின் இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடென் திட்டவட்டமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu