இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி முகமது நாமே நாசர் பலியாகி உள்ளார்.
நேற்று இஸ்ரேல் ராணுவம் லெபனானில் வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் முக்கிய தளபதி முகமது நாமே நாசர் பலியானார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்த டயர் எனும் நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தளபதி பலியானார்.
இந்த தகவலை ஹிஸ்புல்லா குழு உறுதிப்படுத்தி உள்ளது. அவர் ஆசிஸ் படை பிரிவுக்கு தலைமை ஏற்றிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சென்ற வாகனத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த தகவலை இஸ்ரேல் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.