ஹைதி அருகே அகதிகள் படகில் தீ - 40 பேர் பலி

July 20, 2024

ஹைதி அருகே அகதிகள் படகு தீப்பிடித்ததில். 40 பேர் பலியாக்கினர். ஹைதி நாட்டில் இருந்து அகதிகள் துர்க்ஸ் மற்றும் கைகோஸ் என்ற தீவை நோக்கி படகில் சென்றனர். அப்பொழுது திடீரென படகில் தீப்பிடித்தது. அப்போது படகில் இருந்தவர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். 41 பேர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் குட்ஸ்டீன் கூறுகையில், பாதுகாப்பு குறைபாடு […]

ஹைதி அருகே அகதிகள் படகு தீப்பிடித்ததில். 40 பேர் பலியாக்கினர்.

ஹைதி நாட்டில் இருந்து அகதிகள் துர்க்ஸ் மற்றும் கைகோஸ் என்ற தீவை நோக்கி படகில் சென்றனர். அப்பொழுது திடீரென படகில் தீப்பிடித்தது. அப்போது படகில் இருந்தவர்கள் அதில் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். 41 பேர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் குட்ஸ்டீன் கூறுகையில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் புலம்பெயர்வதற்கான சட்டபூர்வ வழிகள் இல்லாதது, இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று கூறியுள்ளார். சமூக மற்றும் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக அங்கு தீவிர வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் அங்கு நிலைமை மேலும் மோசம் ஆகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் குறைபாடு போன்றவை காரணமாக இது போன்ற ஆபத்தான பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu