அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதி சபையின் சபாநாயகராக மைக் ஜான்சன் தேர்வாகியுள்ளார். அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற பிரதிநிதி சபையில் குடியரசு கட்சிக்கே அதிக பலம் உள்ளது. இதனால் அக்கட்சியை சேர்ந்த கெவின் மிக்கார்த்தி சபாநாயகாக இருந்தார். இந்நிலையில், அவர் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்படுவதாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அதனை அடுத்து அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்தனர். அதற்கு பின்னர் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் குடியரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் குடியரசு கட்சியின் சபாநாயகர் வேட்பாளராக மைக் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சபாநாயகர் தேர்வுக்கான ஓட்டெடுப்பில் அவர் 220 வாக்குகள் பெற்றார். அவருக்கு எதிராக 29 வாக்குகள் விழுந்தன. இதனால் பாராளுமன்ற பிரதிநிதி சபையின் சபாநாயகராக மைக் ஜான்சன் தேர்வாகியுள்ளார்.