டெல்லி மற்றும் பீகாரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை டெல்லி என்.சி.ஆர்-இல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், பூமியில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 5:36 மணிக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிப்புகள் இல்லை என்றும், நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக பீகார் மாநிலம் சிவான் பகுதியில் 8:02 மணிக்கு மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.