குஜராத்தில் இன்று 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகளில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டதிலிருந்து 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு உயிர் சேதம் மற்றும் பொருட்கள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்














