தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மீண்டும் ராணுவ மோதல் – கம்போடியா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த F-16 விமானங்கள்!

July 24, 2025

தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல் நடத்தியதும், அதற்குப் பதிலடியாக தாய்லாந்து விமானப்படை கம்போடியா ராணுவத்துக்கு குண்டுமழை பொழிந்தது. எல்லைப் பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்தது. தாய்லாந்து–கம்போடியா நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நிலவும் எல்லைத் தகராறு இன்று மீண்டும் தீவிரமடைந்தது. கம்போடியா ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை பாய்ச்சியதால் தாய்லாந்து அதிர்ச்சி அடைந்தது. பதிலடியாக F-16 போர் விமானங்களை களத்தில் இறக்கிய தாய்லாந்து, கம்போடியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதல் உபோன் ரட்சதானி மாகாணத்தில் இருந்து […]

தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல் நடத்தியதும், அதற்குப் பதிலடியாக தாய்லாந்து விமானப்படை கம்போடியா ராணுவத்துக்கு குண்டுமழை பொழிந்தது. எல்லைப் பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்தது.

தாய்லாந்து–கம்போடியா நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நிலவும் எல்லைத் தகராறு இன்று மீண்டும் தீவிரமடைந்தது. கம்போடியா ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை பாய்ச்சியதால் தாய்லாந்து அதிர்ச்சி அடைந்தது. பதிலடியாக F-16 போர் விமானங்களை களத்தில் இறக்கிய தாய்லாந்து, கம்போடியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதல் உபோன் ரட்சதானி மாகாணத்தில் இருந்து நடைபெற்றது. எல்லை தகராறு நடைபெறும் பகுதியில் “எமரால்டு முக்கோணம்” எனப்படும், பழமையான கோவில்கள் நிறைந்த பகுதியாகும். கடந்த மே மாதம் ஒரு கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்த மோதல் பின்னணியில், இம்மீண்டும் உருவாகும் மோதல் நிலை ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu