தமிழகத்தில் 8 இடங்களில் ராணுவ தளவாட சோதனை மையங்கள்

September 8, 2022

தமிழகத்தில் எட்டு இடங்களில், ராணுவ தளவாட பாதுகாப்பு சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வான்வெளி மற்றும் ராணுவத் துறைக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் கருவிகளை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், 'மேக் இன் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, உத்தர பிரதேசம் மாநிலம் மற்றும் தமிழகத்தில், இந்த துறை சார்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இந்த திட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் […]

தமிழகத்தில் எட்டு இடங்களில், ராணுவ தளவாட பாதுகாப்பு சோதனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வான்வெளி மற்றும் ராணுவத் துறைக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் கருவிகளை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், 'மேக் இன் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக, உத்தர பிரதேசம் மாநிலம் மற்றும் தமிழகத்தில், இந்த துறை சார்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இந்த திட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இதற்காக, ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்வது மற்றும் ஏற்றுமதி குறித்த நடைமுறைகள் எளிமையாக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப தயாரிப்புகளை புதிதாக கண்டுபிடிக்கவும், நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை, ஒரே இடத்தில் சோதனை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆளில்லா வான்வெளி அமைப்பு, ராணுவ தளவாட பாதுகாப்பு சோதனை மற்றும் உள்கட்டமைப்பு வசதி மையங்கள், எட்டு இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

இதற்கு, மத்திய அரசு 400 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்குகிறது. இதில், 20 கோடி ரூபாய் திட்டத்தில் மூன்று சிறு நிறுவனங்கள், 50 கோடி ரூபாய் வரை மூன்று நடுத்தர நிறுவனங்கள், 50 கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டத்தில், இரண்டு நிறுவனங்களும் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களை, https://tidco.com, www.tndefencecorridor.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu