9 ஆண்டுகளுக்கு பிறகு தாய்லாந்தில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றன. ராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் முடிவுகளை அடுத்து தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவம் ஆட்சி முடிவுக்கு வரப்பட்டு ஜனநாயக முறையிலான ஆட்சி அமையவுள்ளது. பார்வர்டு கட்சி மேலும் சில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்றும் பிடா லிம்ஜாரோ என்ரட்டா பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.














