தென் சென்னையில் 2-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

March 15, 2023

ஹோலி பண்டிகைக்காக வெளியூர் சென்ற தொழிலாளர்கள் சென்னை திரும்பாததால், தென் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் நேற்று 2-வது நாளாக பாதிக்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிலநாட்களாக சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில், தென் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆவின் நிறுவன உதவி பொதுமேலாளர் ஒருவர் கூறுகையில், தென் சென்னையில் பால் அட்டைதாரர்களுக்கு வழக்கம்போல அதிகாலை 5 […]

ஹோலி பண்டிகைக்காக வெளியூர் சென்ற தொழிலாளர்கள் சென்னை திரும்பாததால், தென் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் நேற்று 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.

சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிலநாட்களாக சிறிது நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில், தென் சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆவின் நிறுவன உதவி பொதுமேலாளர் ஒருவர் கூறுகையில், தென் சென்னையில் பால் அட்டைதாரர்களுக்கு வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணிக்குள் விநியோகம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், முகவர்களுக்கு அதிகாலை 3 மணிக்கு வழங்க வேண்டிய பால் காலை 8 மணிக்கு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, முகவர்கள் மூலமாக, சில்லரை கடைகள், மளிகைக் கடைகளுக்கு வழங்கும் ஆவின் பால் தாமதம் ஏற்பட்டது. வெளி மாநில தொழிலாளர் பற்றாக்குறையாலும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை புதன்கிழமை சரியாகிவிடும். இருப்பினும் சென்னையில் ஆவின் பாலுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu