அமெரிக்காவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் கார்கள் திரும்பப் பெறப்பட்டது

April 2, 2024

அமெரிக்காவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளதால் கார்களை திரும்பப் பெறுவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பிரேக் ஆயில், ஆன்டி பிரேக்கிங் சர்க்யூட் போர்டில் கசிந்து, கார்கள் எளிதில் தீப்பற்றும் அபாயம் நேர்ந்துள்ளதாக ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்டா பே, எலன்ட்ரா ஆகிய கார் மாடல்களும், கியா நிறுவனத்தின் போர்ட் கார் மாடலும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவில், மொத்தமாக 34 லட்சம் கார்கள் திரும்பப் […]

அமெரிக்காவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளதால் கார்களை திரும்பப் பெறுவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பிரேக் ஆயில், ஆன்டி பிரேக்கிங் சர்க்யூட் போர்டில் கசிந்து, கார்கள் எளிதில் தீப்பற்றும் அபாயம் நேர்ந்துள்ளதாக ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்டா பே, எலன்ட்ரா ஆகிய கார் மாடல்களும், கியா நிறுவனத்தின் போர்ட் கார் மாடலும் திரும்ப பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவில், மொத்தமாக 34 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கார் மாடல்களை வைத்திருப்பவர்கள் வீடுகளை விட்டு தூரமாக கார்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கார்களை சீர் செய்ய வேண்டி உள்ளதால், கார்களை திருப்பி வழங்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu