தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட கனிம நிலவரி விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி, பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், மாக்னசைட் உள்ளிட்ட 13 வகை பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7,000 வரை வரியும், கரட்டுக்கல், மணல், கூழாங்கல் உள்ளிட்ட 17 வகை சிறிய கனிமங்களுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரியும் நிலவரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பதவிக்காலம் முடிந்த 28 மாவட்ட உள்ளாட்சிகளில் தற்காலிக அதிகாரிகள் நியமிக்கும் சட்டத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த இரண்டு சட்டங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.














