டெல்லி அரசு பள்ளிகளில் மினி சிற்றுண்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் விதமாக டெல்லி அரசு பள்ளிகளில் மினி சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி மதிய உணவுக்கு முன்பாக மினி சிற்றுண்டி இடைவேளை திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாநில கல்வி இயக்குநரகம் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மினி சிற்றுண்டியில் தினசரி மூன்று விதமான உணவு தேர்வுகள் இடம் பெற வேண்டும். அவற்றில் அந்தந்த பருவங்களில் கிடைக்கக் கூடிய பழங்கள், முளைகட்டிய பயிறுகள், சாலட், வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.