முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ரூபாய் 1264 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊடக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1374 புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 80 கோடி 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன. செலவில் 770 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது அதேபோன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 48.56 கோடி செலவில் கட்டிடங்கள், 3. 92 கோடி செலவில் நூலக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில்வல்லுனர்கள் பணி புரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் மினி டைட்டில் பூங்கா கட்டப்பட்டுள்ளது இவை அனைத்தையும் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளார். நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் செயலாளர்கள் வேட்பாளர் கலந்து கொண்டனர்.














