டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியில் தற்போது குறைந்தபட்சம் 40 சதவீத தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது.
தமிழக அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம். தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்பட உள்ளது. அதன்படி கட்டாய தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது