பிளஸ் 2 தேர்வில் 50,000 மாணவர்கள் வரதாதது தொடர்பாக அமைச்சர் ஆலோசனை

March 16, 2023

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் வரதாதது தொடர்பாக அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வரதாதது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான காரணம் தொடர்பாகவும், இதை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. விரைவில் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இதற்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இது […]

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் வரதாதது தொடர்பாக அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வரதாதது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான காரணம் தொடர்பாகவும், இதை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. விரைவில் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இதற்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. முன்னதாக 2019ம் ஆண்டு 49 ஆயிரம் பேர் தேர்வுகளுக்கு வராமல் இருந்துள்ளனர். பயம், சமூக பொருளாதார நிலை, கரோனா என்று அனைத்து பிண்ணனி தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu