தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்த வளர்மதி ஆகியோர்களின் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2014 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு கூட்டுறவு அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவியில் இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசுக்கு சொந்தமான வீட்டை முறைகேடு செய்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டு, சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதேபோல் அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக 2001-2006ம் ஆண்டுகளில் இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இவை இரண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.