தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க மாநில தலைவராக அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஒரு இயக்கமாகும். இந்த இயக்கத்தின் தலைவராக மாநிலபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த அதிமுக ஆட்சியில் மாநில தலைவர் பதவிக்கு எச்.ராஜா, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மணி போட்டியிட்டனர். அதில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மணி வெற்றி பெற்றார். அவரது பதவிக்கலாம் முடிந்துள்ளதால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியது.
அறிவிப்பின் படி, தலைவர், துணைத்தலைவர், மாநில ஆணையர் பதவிகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் 26ம் தேதி வெளியானது. தற்போது இந்த தேர்தலில் மாநில தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் பள்ளி கல்வி துறை ஆணையர் மற்றும் பாரத சாரணர் சாரணியர் இயக்க மாநில ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக பள்ளிக் கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், பெரியண்ணன், விவேகானந்தன், மகேந்திரன், எத்திராஜூலு, நாராயணசாமி, லட்சுமி, சுகன்யா, அமுதவள்ளி, கஸ்தூரி சுதாகர், பாக்கியலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.