மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா, ஜப்பான் நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மங்கோலியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மங்கோலிய அதிபர் குரேல்சுக், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சைகான் பயார் உள்ளிட்டோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதையடுத்து, 8-ம் தேதியன்று ஜப்பான் செல்கிறார். அவருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இணைந்து கொள்வார். அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும் அங்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆய்வு செய்கின்றனர். அதோடு பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ஜப்பான் வெளியுறவுத் அமைச்சர் யோஷிமசா ஹயாஷி, பாதுகாப்பு துறை அமைச்சர் யசுகாஸு ஹமாடா உள்ளிட்டோர் தலைமையிலான குழு இந்த ஆலோசனையில் பங்கேற்கும். இதுகுறித்த தகவலை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.














