ராயபுரத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் - உதயநிதி ஸ்டாலின் திறந்தார்

February 3, 2023

ராயபுரத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ராயபுரம் மண்டலம் 63-வது வார்டுக்கு உட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த […]

ராயபுரத்தில் ரூ.25 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை ராயபுரம் மண்டலம் 63-வது வார்டுக்கு உட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குழந்தைகளை நல்ல முறையில் கவனித்து கொள்ளவேண்டும் என்றும், ஊட்டச்சத்து மிக்க உணவை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu