மின்னசோட்டா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீர் கசிவு

March 17, 2023

அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பகுதியில், எக்ஸெல் எனர்ஜி என்ற பெயரில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, கிட்டத்தட்ட 1.5 மில்லியன் லிட்டர் கதிரியக்க நீர் கசிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த நவம்பர் 21ம் தேதி, இந்த கசிவு முதல் முறையாக கண்டறியப்பட்டது. ஆனால், இது குறித்து நேற்று வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த கதிரியக்க நீர் கசிவு அணுமின் நிலையத்தின் வளாகத்திற்குள் மட்டுமே கண்டறியப்பட்டது. வளாகத்திற்கு வெளியே கதிரியக்கம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன், […]

அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பகுதியில், எக்ஸெல் எனர்ஜி என்ற பெயரில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, கிட்டத்தட்ட 1.5 மில்லியன் லிட்டர் கதிரியக்க நீர் கசிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த நவம்பர் 21ம் தேதி, இந்த கசிவு முதல் முறையாக கண்டறியப்பட்டது. ஆனால், இது குறித்து நேற்று வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த கதிரியக்க நீர் கசிவு அணுமின் நிலையத்தின் வளாகத்திற்குள் மட்டுமே கண்டறியப்பட்டது. வளாகத்திற்கு வெளியே கதிரியக்கம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன், இதுவரையில், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித உடல்நல கேடும் உணரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசிந்த கதிரியக்க நீரில், ‘ட்ரைடியம்’ எனப்படும் கதிரியக்க பொருள் உள்ளது. இது, மனித உடலின் தோல் பகுதியை துளைத்து உள் செல்வதற்கான ஆற்றல் கொண்டதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மூலம் வெகு தூரம் பயணிக்காத பீட்டா வகை கதிரியக்கமாக சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu