எகிப்து நாட்டின் தபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காசா முனையிலிருந்து எகிப்து எல்லையில் 200 கிலோ மீட்டர் தொலைவில் தபா பகுதி உள்ளது. இங்கு உள்ள ஒரு கட்டிடம் மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு இஸ்ரேல் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக இஸ்ரேல் ஏவுகணை தவறுதலாக எகிப்து எல்லையை தாக்கியது. இந்த தாக்குதல் தவறுதலாக நடைபெற்றது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. முன்னதாக காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இது நாங்கள் நடத்திய தாக்குதல் அல்ல என்று இஸ்ரேல் உடனடியாக தெரிவித்திருந்தது. இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயார் என்று அறிவித்திருந்தது. காசா முனையை தவிர லெபனான் எல்லை மேற்கு கரை ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான அடிப்படை உதவிகள் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.














