ஜப்பான், தனது பாதுகாப்புத் திறனை வளர்க்கும் முயற்சியாக, முதல் முறையாக தனது நிலத்தில் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. ஹொக்கைடோ தீவில் டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் அடிக்கும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சீனாவின் போர் கப்பல் ஜப்பான் கடலோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு உளவுத்துறையில் அதிர்வலை ஏற்பட்டு, சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் சோதனைகள் செய்த ஜப்பான், இம்முறை சொந்த நாட்டில் சோதனை நடத்தியது புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக நடந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.