காசா தாக்குதலில் முக்கிய நபர்கள் பலி எதிரொலி - இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் ஏவுகணை தாக்குதல்

May 11, 2023

நேற்று முன்தினம், பாலஸ்தீன தலைநகர் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில், இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவை சேர்ந்த 3 முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், முக்கிய தளபதிகளுடன் சேர்த்து 16 பேர் பலியாகினர். குறிப்பாக, இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் கலிலி பாட்டினி, தாரிக் இசெல்தீன், ஜிகாத் கனாம் ஆகிய மூவர் உயிர் இழந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், நேற்று முதல், இஸ்ரேல் மீது தொடர் […]

நேற்று முன்தினம், பாலஸ்தீன தலைநகர் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில், இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவை சேர்ந்த 3 முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், முக்கிய தளபதிகளுடன் சேர்த்து 16 பேர் பலியாகினர். குறிப்பாக, இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் கலிலி பாட்டினி, தாரிக் இசெல்தீன், ஜிகாத் கனாம் ஆகிய மூவர் உயிர் இழந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், நேற்று முதல், இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாலஸ்தீன விடுதலை அமைப்பை சேர்ந்தவர்கள், தொடர்ந்து இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. கடந்த சில தினங்களாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் ஒன்றோடு மற்றொன்று தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu