வங்கதேச எம்.பி அன்வருல் அசீம் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வங்கதேச எம்.பி அன்வருல் அசீம் கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்திலிருந்து கொல்கத்தா வந்திருந்தார். ஆனால் 14ஆம் தேதிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காணாமல் போன அன்வருல் அசிமை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அன்வருல் அசீம் நியூ டவுன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைவர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்