டிவிஎஸ் மொபிலிட்டி உடன் கூட்டு - இந்திய சந்தையில் நுழையும் மிட்சுபிஷி

February 19, 2024

இந்தியாவின் கார் விற்பனை சந்தையில் ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனம் நுழைகிறது. டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்கி, இந்திய சந்தைக்குள் மிட்சுபிஷி நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கார் விற்பனை சந்தையில் முக்கிய டீலராக டிவிஎஸ் மொபிலிட்டி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு 33 மில்லியன் முதல் 66 மில்லியன் டாலர்கள் வரை மிட்சுபிஷி முதலீடு செய்ய உள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்து வித ஒப்புதல்களும் பெறப்பட்டு, முதலீடு […]

இந்தியாவின் கார் விற்பனை சந்தையில் ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனம் நுழைகிறது. டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்கி, இந்திய சந்தைக்குள் மிட்சுபிஷி நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கார் விற்பனை சந்தையில் முக்கிய டீலராக டிவிஎஸ் மொபிலிட்டி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு 33 மில்லியன் முதல் 66 மில்லியன் டாலர்கள் வரை மிட்சுபிஷி முதலீடு செய்ய உள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்து வித ஒப்புதல்களும் பெறப்பட்டு, முதலீடு செய்யப்படும் என மிட்சுபிஷி தெரிவித்துள்ளது. முதலீடு உறுதியாகும் பட்சத்தில், தனது ஊழியர்களை டீலர்கள் ஆக புகுத்த உள்ளதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu