தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் தமிழகத்தில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். குறிப்பாக, Temasek, Sembcorp, CapitaLand நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், 2024 ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Temasek நிறுவனம், தமிழகத்தில் ஏற்கனவே காற்றாலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவ வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. Sembcorp நிறுவனத்திடம், எரிசக்தி துறையில் தமிழகத்தில் முதலீடு செய்ய எடுத்துக் கூறப்பட்டது. CapitaLand, 'சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்' வடிவமைத்த நிறுவனம் ஆகும். அது போன்ற தொழில்நுட்ப பூங்காக்களில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்பட்டு, அது சார்ந்த முதலீடுகளை அளிக்க நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.